தபால் வாக்குப் பதிவு எப்படி நடைபெறுகிறது? - தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் தபால் வாக்குப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

 • Share this:
  சென்னையில் இன்று முதல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் பெறும் பணி துவங்குகிறது. அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும் கொடி அசைத்து துவக்கி வைக்கப்படுகிறது. சேப்பாக்கம் - திருவல்லிகேணி தேர்தல் அலுவத்தில் மூலம் 455 தபால் வாக்குகளை பெற 5 குழுக்கள் அமைத்து பெறப்படுகின்றது. அதனை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

  சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த 7,300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தபால் வாக்குச் சீட்டுகளை பெறுவது இன்று முதல் 7 நாட்கள் வரை நடைபெறும்.

  வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் சேகரிக்கப்பட்டு, பிரதான பெட்டியில் கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்க்கப்படும். தபால் வாக்கு அளிக்கும் வாக்காளர்களின் விவரம், தபால் வாக்குகளை வழங்கும் இடங்கள் மற்றும் தேதி குறித்த விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

  வேட்பாளர்களின் சார்பில் ஒருவர் தபால் வாக்குகள் பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு பணிகளை மேற்கொள்ள 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  ஒவ்வொரு குழுவும் தினமும் 15 வாக்குச் சீட்டுகளைக் கொடுத்து, வாக்களித்த பின்னர் பெறுவார்கள். இக்குழு 2 முறை வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும். அவ்வாறு 2 முறை சென்றும், வாக்காளர் வீட்டில் இல்லை என்றால் அவர்கள் வாக்களிக்க இயலாது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குச்சாவடிக்கு வந்தும் அவர்கள் வாக்களிக்க முடியாது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: