அடுத்த இன்னிங்ஸ்க்குத் தயாராகும் தமிழக அரசியல் களம்

அடுத்த இன்னிங்ஸ்க்குத் தயாராகும் தமிழக அரசியல் களம்

சசிகலா

ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும். பாஜக குழப்பமான நிலைக்குச் செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசியல் ஆடுகளத்தில் இறங்கத் தயாராகி வருகிறார் ரஜினி. இதனைத் தொடர்ந்து, கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பாரா, தனித்து நின்று அரசியல் நடத்துவாரா என்ற கேள்விகள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ரஜினியின் வருகையால் மற்ற கட்சிகளுக்கு இருக்கும் சாதக, பாதகங்கள் தொடர்பான கணிப்புகள் மறுபுறம் பரபரப்பாக போய்கொண்டிருக்கின்றன.

அதிமுக நடத்திவரும் அரசு விழாக்கள், திமுகவின் தேர்தல் சுற்றுப் பயண பரப்புரைகள், பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டங்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் இடதுசாரிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், பாஜகவின் வேல் யாத்திரை என தேர்தலை மையமிட்டு தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினரின் அறிக்கைகளும், சமூக வலைதளப் பக்கங்களிலும் தேர்தல் வாசம் அதிகமாக வீசுகின்றது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, தண்டனை காலம் முடிந்து விரைவில் விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகி வருகின்றது. சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also read: இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு... உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

சசிகலாவின் விடுதலை குறித்து பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் கர்நாடக சிறைத்துறைக்கு ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டிருந்தார். அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார்’ என பதில் கிடைத்தது.

இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என மனு அளித்தார். ’இது தொடர்பாக விரைவில் முடிவெடித்து தெரிவிக்கப்படும்’ என சிறைத்துறை தரப்பில் இருந்து தகவல் கிடைத்திருகின்றது என்றும், சிறையில் உள்ள சசிகலா எந்த நேரமும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாககவும் கூறினார்.

சசிகலா சிறை சென்றது முதலே அவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி. அத்துடன், அதிமுகவை அவர்தான் நிர்வகிப்பார் என்றும் கூறிவருகின்றார்.

Also read: வட்டிக்கு வட்டி கடன் பிரச்னை: ’இதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை?' - சு.வெங்கடேசன் எம்பி கேள்வி

கடந்த மார்ச் மாதம், ‘சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்’ என்றார் சுப்ரமணியன் சுவாமி கூறினார். ரஜினி கட்சி தொடங்க இருப்பது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ள அவர், ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும். பாஜக குழப்பமான நிலைக்குச் செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2019 பிப்ரவரியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, “சசிகலாவோடு பாஜக கூட்டணி அமைக்க வேண்டும்” என்றார். கடந்த மார்ச் மாதம் அவர் பேசுகையில், “சசிகலா வந்ததுக்கு அப்புறம், சசிகலா இல்லாம அரசியல் பண்றது ரொம்பக் கஷ்டம்” என்று கூறினார். இவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளா விட்டாலும் கருத்தில் கொள்வது அவசியம்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், தமிழக அரசியல் களம் அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகிவிட்டது என்றே சொல்லலாம். சசிகலாவின் விடுதலைக்குப் பின்னர், திடீர் திருப்பங்கள், அதிரடி மாற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. பொங்கலுக்குப் பின்னர் தமிழக அரசியல் களம், புழுதி பறக்கும் ஜல்லிக்கட்டாக மாற வாய்ப்பிருக்கின்றது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Suresh V
First published: