• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக்குழு - ஆளுநர் அறிவிப்பு

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக்குழு - ஆளுநர் அறிவிப்பு

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

ஆளுநர் உரையில் பல்வேறு விவகாரங்கள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, பொருளாதார நிலைமை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மை நிலையை விளக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் எனவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்ய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இந்த போக்கினை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆலோசனைக் குழு


இதற்காக தமிழ்நாடு அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதி செயலாளருமான எஸ்.நாராயண் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த குழு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதை அரசு உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: