• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எடப்பாடி பழனிசாமிக்கு சேலஞ்ச் விட்ட துரைமுருகன்... சட்டப்பேரவையில் காரசார விவாதம்

எடப்பாடி பழனிசாமிக்கு சேலஞ்ச் விட்ட துரைமுருகன்... சட்டப்பேரவையில் காரசார விவாதம்

எடப்பாடி பழனிசாமி - துரைமுருகன்

எடப்பாடி பழனிசாமி - துரைமுருகன்

கடந்த ஆட்சிக்காலத்தல் கோ-ஆப்டெக்ஸ்ஸில் வாங்கிய துணிகள் தரமற்று இருந்ததால் தான் 4 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டது.

  • Share this:
கடந்த ஆட்சியைவிட தற்போது கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என தாம் சேலஞ்ச் செய்வதாக அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். அப்போது எதிர்கட்சித் தலைவருக்கும், அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்ற துணிகள் என நேற்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசியதாக குறிப்பிட்டதுடன், ஒரு விளக்கத்தையும் அளித்தார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கூட்டுறவு நெசவாளர் சங்கங்களிடம் இருந்துதான் துணிகளை கொள்முதல் செய்வதாகவும், ஆகையால் நெசவாளர்களை கொச்சைப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் அமைச்சருமான துரை. முருகன், கடந்த ஆட்சிக்காலத்தல் கோ-ஆப்டெக்ஸ்ஸில் வாங்கிய துணிகள் தரமற்று இருந்ததால் தான் 4 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டு அந்த துணிகளை விற்பனை செய்ய முயன்றதாகவும், ஆகையால் வாங்கிய துணிகள் தரமற்றது என்று கூறியதில் தவறில்லை என்று தெரிவித்தார்.

Also Read : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு

மீண்டும் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் துரைமுருகன் சமாளித்து பேசுகிறார். கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனத்தின் துணிகள் தரமற்றது என்றால் பொதுமக்கள் அச்சப்படுவார்கள் என்று தெரிவித்ததோடு, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நெசவாளர்களுககு 340 கோடி ரூபாய் மானியம் வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.

அப்போது மீண்டும் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம் தான் என்றும், கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்படும் துணிகளில் தரமில்லை என்றால் அதை தரமில்லை என்றுதான் குறிப்பிட முடியும் என்று தெரிவித்ததோடு, கடந்த ஆட்சியைவிட தற்போது கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் திறம்பட செயல்படும் என தாம் சவால் விடுவதாக கூறினார்.

Also Read : அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - அகவிலைப்படி முன்கூட்டியே வழங்கப்படும் என அறிவிப்பு

இறுதியாக இந்த விவாதத்தில் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, கடந்த ஆட்சியில், தனியார்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்களுடை துணிகளை கொடுத்து, கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்ததாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: