நீங்களும் அப்படி தான் பழனிசாமி... துரைமுருகன் பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

துரைமுருகன்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் விளக்கம் அளிக்கும்போது சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

  • Share this:
    சட்டப்பேரவை விவாதத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்ததால் சிரப்பலை உண்டானது.

    அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பொது விவாதத்தில் பேசுகையில், "தேர்தல் வாக்குறுதியில் குடுத்தவை நிதி அறிக்கையில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பொருளாதாரம் தெரியாத ஒருவர் எத்தனை முறை இந்த கேள்வியை கேட்பார். எத்தனை முறை விளக்கம் அளிப்பது என்றார்.

    இதனையடுத்து நிதியமைச்சர், பழனிவேல் தியாகராஜன் நிதி அறிக்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். மீண்டும் கேள்வி எழுப்பிய அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது இங்கே தானே இருந்தீர்கள்? எந்த அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், "இடைக்கால பட்ஜெட் போது வெளிநடப்பு செய்து இருந்தோம். ஆனால் அதை செய்தித்தாளில் பார்த்து படித்து தெரிந்து கொண்டோம்", என்றார்.

    Also Read : அரசின் சமூகநீதி திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாழ்படுத்துகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மீண்டும் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சம்பத், "கடன் இருப்பது தெரிந்தும் நகை, கல்வி, விவசாய கடன் தள்ளுபடியை எப்படி தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள்? நிதியமைச்சர் பதிலளிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் மீண்டும் இதே கருத்தை பேச வேண்டாம். ஆக்கபூர்வமான கருத்துக்களை உறுப்பினர்கள் பேச வேண்டும்" என்றார்.

    அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "அமைச்சர்கள் விளக்கம் அளிக்கும்போது சுருக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது தான் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்", என்றார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், "எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை பின்பற்றுகிறேன் என்று தெரிவித்தார்.

    அதனை அடுத்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "இதே கருத்தை நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நான் 1000 முறை கேட்டிருக்கிறோம். நாங்கள் கேள்வி எழுப்பி விட்டு டீ குடித்துவிட்டு வரும் வரை நீங்கள் அதையே விளக்கி கொண்டிருப்பீர்கள் என நகைச்சுவையோடு கூற அவையில் சிரிப்பலை எழுந்தது.

    Also Read : நூறு நாட்களில் 2000 மணி நேரம் மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றிவர் முதல்வர் ஸ்டாலின் - திமுக எம்.எல்.ஏ பேச்சு

    மீண்டும் எழுந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பேசுகையில், "பொருளாதாரம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. நிதியமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று பொருளாதாரத்தை படித்துவிட்டு வந்திருக்கிறார். பொருளாதாரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மக்கள் பிரச்சனையை பேசதான் சட்டப்பேரவைக்கு வந்துள்ளோம், பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்க நாங்கள் வரவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை பற்றி தெரிந்திருந்தால் போதும். மக்கள் பிரச்சினை குறித்து தெரியாமல் பொருளாதாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் நிதியமைச்சர்", என்றார். அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், "பொருளாதாரம் குறித்து படித்த எனக்கே நிதியமைச்சர் பேசுவது முழுதாக புரியவில்லை. சில நேரங்களில் நிதியமைச்சர் கூறுவது எனக்கே புதிது புதிதாக உள்ளது. மற்றவர்கள் புரிய வேண்டும், புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அவர் ஆர்வமாக எடுத்துச் சொல்கிறார்", என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: