தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்துவந்த வரலாறு: கோலகலமாக கொண்டாப்படவுள்ள நூற்றாண்டு விழா

தலைமைச் செயலகம்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூறாண்டுகளைக் கடந்துள்ளது. அதனுடைய வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

  • Share this:
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. 1919ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டத்தின் மூலம் அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த சட்டமே பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாகுவதற்கு வழிவகுத்தது.

அந்த சட்டத்தின்படி சென்னை மாகாண மன்றத்திற்கு 1920-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி நிகழ்ந்த முதல் பொதுத்தேர்தலில் நீதி கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி சுப்பராயலு ரெட்டி தலைமையில் முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது.

1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனடிப்படையில் கடந்த 1997ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் சட்டமன்ற பவள விழா மற்றும் வைர விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

2011இல் அதிமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதற்கு பிறகு 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையின் வைர விழா கொண்டாடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குடியரசு பெற்றதற்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றம் அமைக்கப்பட்டது என்பதை மேற்கோள் காட்டி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையின் அறுபதாவது ஆண்டு வைர விழாவை விமர்சையாக கொண்டாடினார்.

சென்னை கடற்கரை சாலையில் சட்டப்பேரவை வைரவிழா நினைவு வளைவு அமைக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 60 வது ஆண்டு வைர விழா கொண்டாடப்பட்டது.

அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, தி.மு.க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார், குறிப்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையை இடமாற்றம் செய்யாமல் இங்கேயே தொடர்வதற்கு தான் அவசரமாக இந்த விழா நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூற்றாண்டு நிறைவு பெற்றதற்கான விழாவிற்கு தலைமை தாங்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டு சென்னை, பம்பாய், வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் சட்டமன்றம் முதல்முறையாக நிறுவப்பட்டது. அந்த அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கணக்கிட்டு தமிழ்நாடு அரசு நூற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளது.
Published by:Karthick S
First published: