எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது கட்சி பாகுபடுயின்றி நடந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல் நாளில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து 31 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.

  இவர்களில் 2 அமைச்சர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி , முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராம் , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் , கட்சிகளின் சட்டப்பேரவை குழு தலைவர்கள், அவர்களை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் , அகர வரிசைப்படி பதவியேற்று கொண்டார்கள்.

  முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் , பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோர் பதவி பிரமாணம் செய்து கொண்ட பின்பு கட்சி பாகுபாடின்றி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்; முதலமைச்சர் ஸ்டாலினும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: