ஹைட்ரோ கார்பன் திட்டம் இனி தமிழகத்தில் செயல்பட வாய்ப்பே இல்லை - முதலமைச்சர்

"ஆலந்தூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் காலதாமதம் ஆகிறது. ஆனாலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்"

ஹைட்ரோ கார்பன் திட்டம் இனி தமிழகத்தில் செயல்பட வாய்ப்பே இல்லை - முதலமைச்சர்
பேரவையில் உரையாற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
  • News18
  • Last Updated: March 11, 2020, 8:08 PM IST
  • Share this:
விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும் இனி தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம் இனி தமிழகத்தில் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் இனி எப்போதும் துவங்கப்படாது என்றும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் அத்திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கும் வகையில்தான் காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம், பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 14 வகையான பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை முழுமையாக ஒழிப்பதற்கு மக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார். விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், அதைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வேளச்சேரி -பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருப்பதாகவும், இருப்பினும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார். அதேபோல், ஆலந்தூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நீதிமன்றத்திற்கு சென்று விடுவதால் காலதாமதம் ஆவதாகவும், ஆனாலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading