தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 13ல் கூட்டத்தை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று பாமக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.
தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. அன்று 2021-22ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.
மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 21 வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தை முன்னதாக, செப்டம்பர் 13ல் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்தார். புதிய நிகழ்ச்சி நிரலின்படி இன்றும், நாளையும் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். நாளை விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவார்கள். அடுத்த மூன்று நாட்கள் அரசு விடுமுறை. எனவே, மானிய கோரிக்கை மீதான விவாதம் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
அதன்படி இன்று, நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான 3ஆம் நாள் விவாதத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளார்கள். இன்று பாமக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.
மானிய கோரிக்கை நிகழ்ச்சி நிரல் விபரம்:
ஆகஸ்ட் 23 - நீர்வளத் துறை.
ஆகஸ்ட் 24 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
ஆகஸ்ட் 25 - கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.
ஆகஸ்ட் 26 - உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை.
ஆகஸ்ட் 27 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை கட்டடங்கள்.
ஆகஸ்ட் 28 - வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை.
ஆகஸ்ட் 29 - ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை ஆகஸ்ட் 30 - கிருஷ்ண ஜெயந்தி, அரசு விடுமுறை.
ஆகஸ்ட் 31 - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் 1 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை.
செப்டம்பர் 2 - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.
செப்டம்பர் 3 - வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
செப்டம்பர் 4 - ஹிந்து சமய அறநிலையத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை.
செப்டம்பர் 5 - அரசு விடுமுறை.
செப்டம்பர் 6 - செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, கைத்தறி மற்றும் துணி நுால் துறை, கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், வணிக வரி மற்றும் பதிவுத் துறை.
செப்டம்பர் 7 - நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத் துறை, எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை.
Must Read : அரசின் சமூகநீதி திட்டத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாழ்படுத்துகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் 8 - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
செப்டம்பர் 9 - போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை
செப்டம்பர் 10 - விநாயகர் சதுர்த்தி, அரசு விடுமுறை
செப்டம்பர் 11 - காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
செப்டம்பர் 12 - அரசு விடுமுறை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இறுதி நாளான செப்டம்பர் 13 - திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை; சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, மனிதவள மேலாண்மைத் துறை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.