ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் எதிர்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இது முறையல்ல என ஆளுநர் அப்போது கூறினார்.

 • Share this:
  ளசென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இதில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

  கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், கடந்த சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இந்த முறையும் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

  இதற்காக, சேப்பாக்த்தில் உள்ள கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள பகுதியில் அதிகாலை முதலே பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

  இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் எதிர்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இது முறையல்ல என ஆளுநர் அப்போது கூறினார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக, ஆளுநர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  Published by:Suresh V
  First published: