ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் இருந்து வரும் சூழ்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல்கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார்.
முன்னதாக, ஆளுநரை தமிழக சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு இயல் இசை கல்லூரி மாணவிகள் தமிழ்தாய் வாழ்த்தைப் பாடினர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 9:15 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அலுவலகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் தமது உரையில், 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி. இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வளம்மும் பெருக வேண்டும். கொரோனா இரண்டாம் அலையை சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினார் முதலமைச்சர்.
மெகா தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 86% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசின் ஒத்துழைப்பிற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Must Read : விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. கொரோனா பேரிடருக்கான 541.64 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.