ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் என்ன சொன்னார்? ஹைலைட்ஸ்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் என்ன சொன்னார்? ஹைலைட்ஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Governer RN Ravi Speech | நீட் போன்ற நுழைவு தேர்வுகள் தேவையற்றன என இந்த அரசின் நிலைப்பாட்டினை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு பூங்கொடுத்து வரவேற்றார். இதையடுத்து தமிழ்நாடு இயல் இசை கல்லூரி மாணவிகளால் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

  இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி வணக்கம் என்று தமிழ் சொல்லி உரையை ஆரம்பித்தார். பதவியேற்ற முதல் நொடியில் இருந்தே ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடக்கிவிட்டு, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலம் எங்கும் கிடைப்பதை உறுதி செய்து தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையை திறம்பட கையாண்ட முதலமைச்சருக்கு பாராட்டு.

  மாநிலம் முழுவதும் வாரம்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற போது தடுப்பூசிகளுக்கு தகுதியானவர்களின் 8.9% மக்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 2.84 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் என்ற குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டிருந்தது. அரசின் சீரிய முயற்சிகளால் இந்த நிலை மாறி ஏழு மாதங்களில் 86.95 சதவீத மக்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 60.71 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் என 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.. கொரோனா பேரிடருக்கான 541.64 கோடி செலவிடப்பட்டுள்ளது

  நீட் போன்ற நுழைவு தேர்வுகள் தேவையற்றன என இந்த அரசின் நிலைப்பாட்டினை தொடர்ந்து வலியுறுத்துவோம். வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது கல்வி நிறுவனங்களின் அருகில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும். முதலீடுகளை பெருக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது

  ஒரகடத்தில் மருத்துவ பூங்கா அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்கும் அரசிற்கு உரிய வருவாயை திரட்டுவதற்கும் "இயற்கை வள மேலாண்மை திட்டம்" உருவாக்கப்படும் 7 ஆயிரத்து 760 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொள்கை அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

  Also read : சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் பலி

  அடுத்த 10 ஆண்டுகளில் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். வேளாண் தொழிலை மேம்படுத்த உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு நீண்டகாலத் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து பரிந்துரை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது..வெள்ளதால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நீண்டகால நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும்.

  2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எய்த வேண்டும் என முதல்வர் உறுதியாக உள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளுக்கான 100 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

  நகர்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசு பள்ளிகளை நவீனமாக்க ஒரு மாபெரும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.. 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மேம்படுத்தப்படும்.

  இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்போம் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது

  தமிழ் மொழியை போற்றி அதன் செம்மையை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் மனதிறன் பயிற்சி வழங்கப்படும். அறிவியல் சிந்தனை, தொழில் திறன் படைத்த இளைஞர் சமுதாயம், பன்முகத் திறமை கொண்ட வெற்றியாளர்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் அரசின் சொத்துக்களை மேலாண்மை செய்வதற்கு கணினி மயமாக்கப்பட்ட அமைப்பு உருவாக்கப்படும் என்றார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: TN Assembly