Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் - பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது திமுக

  • News18 Tamil
  • | May 02, 2021, 19:04 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    10:5 (IST)

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி வெற்றி நிலவரம் :  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என அறிவிப்பு

    10:5 (IST)

    கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

    10:4 (IST)

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை. 

    9:49 (IST)

    தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வர இருப்பதையடுத்து திமுக அலுவலகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி கண்ணன் தலைமையில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    17:51 (IST)

    திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி

    -  மு.க.ஸ்டாலின்

    17:27 (IST)

    திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 68,880 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி


    17:27 (IST)

    பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொள்ளாச்சி ஜெயராமன் 1,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.


    17:25 (IST)


    பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் முன்னிலை 

    தவாக (திமுக) வேல்முருகன் - 57913
    அதிமுக  சொரத்தூர் ராஜேந்திரன் - 53996
    வித்தியாசம் - 3917

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.  இதில், திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.