மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் தஞ்சையில் சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. முகாமினை மத்திய இணை அமைச்சர்கள் நாராயணசாமி மற்றும் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் தஞ்சை மாவட்ட 1,705 பயணானிகளுக்கு 1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான 3,770 உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,மத்திய அரசு விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் வேளாண் சட்டம் என்பது இயற்றப்பட்டதாக பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் முருகன், வேளாண் திருத்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என இயற்றப்பட்டுள்ளது.
இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. தேவையில்லாமல் தமிழக அரசு இதற்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி இருக்கிறது. இச்சட்டத்தை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. அறியப்படாத தலைவர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை பொதிகையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை 23 மீனவர்களை திரும்பிக் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசிடம் 23 மீனவர்களின் முழு விவரமும் கேட்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் இந்திய அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2014 க்கு முன்பு 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 2016 பிறகு ஒரு மீனவர் கூட கொல்லபட்டது கிடையாது. தற்போது சில சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அது ஏன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எப்படி நடைபெற்றது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், மீனவர்கள் நலனில் முழுமையாக அக்கறை செலுத்தி வருகிறோம்.
மீனவர் நலன் மேம்பாடு எங்கள் குறிக்கோள். வேளாண் திருத்தச் சட்டத்தை எந்த ஒரு விவசாயியும் எதிர்க்கவில்லை தமிழகத்தில் தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு கர்நாடகா என்று இல்லை இரண்டு மாநிலங்கள் நலனும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.