மேகதாது அணை விவகாரம்... அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இன்று டெல்லி பயணம்

மேகதாது அணை

வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து பேச உள்ளனர்.

  • Share this:
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச உள்ளனர். அப்போது, மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்த உள்ளனர்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்னை குறித்து விளக்கியதுடன், தமிழக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தமிழக அரசு கடந்த 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக மக்களின் எதிர்ப்பை பிரதிபலிக்கும் விதமாக இந்த தீர்மானங்களை மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் வியாழக்கிழமை விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து பேச உள்ளனர். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமைச்சரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

    Must Read : ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் புதுச்சேரிக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி அரசு சார்பில் கடிதம் எழுதுவது என முடிவு செய்யப்பட்டது.

    இதனிடையே செவ்வாய்கிழமை பெங்களூருவில் முதலமைச்சர் எடியூரப்பா உடனான சந்திப்பின்போது கஜேந்திர சிங் ஷெகாவத், மேகதாது தொடர்பாக எதுவும் விவாதிக்கவில்லை என மத்திய நீர்வளத்துறை விளக்கம் அளித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: