• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேகதாது அணை விவகாரம்... இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறது தமிழக அனைத்துக் கட்சிக் குழு

மேகதாது அணை விவகாரம்... இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறது தமிழக அனைத்துக் கட்சிக் குழு

மேகதாது அணை

மேகதாது அணை

இன்று மதியம் 1.30 மணியளவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

  • Share this:
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்கவுள்ளார்.

    மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 12ம் தேதி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர் துரைமுருகன் தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவுத்தலைவர் பால் கனகராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அதிமுக சார்பில் கலந்துகொள்ளும் ஜெயக்குமார் இன்று செல்கிறார். இந்த குழு இன்று மதியம் 1.30 மணியளவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

    இதனிடையே தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். உண்ணாவிரதப் போராட்ட நிறைவில் பேசிய பி.ஆர்.பாண்டியன், மேகதாது விவகாரத்தில் வருகிற 26ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

    Must Read : ஊரடங்கில் என்னென்ன மாற்றங்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

    இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று சந்திக்கவுள்ளார். இதுதொடர்பாக டெல்லி செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு பிரதமரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது, அணைக்கான அனுமதியை, மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்க உத்தரவிடுமாறு மனு அளிக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: