• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை " சிறப்பு ஊக்கத்தொகையாக " டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

  • Share this:
    தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக இன்று வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    வேளாண்மை பட்ஜெட்டில் பனை, கரும்பு, தோட்டக்கலை, சிறு குறு விவசாயிகளுக்கான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வேளாண் பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



    வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    வேளாண்மைகான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

    * நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

    * ஒட்டன்சத்திரம், பன்ரூட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி செலவில் குளிப்பாதன கிடங்குகள் மாநில அரசு நிதியில் இருந்து அமைக்கப்படும்

    * 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புதுப்பொலிவுடன் செயல்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்

    * மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படும்

    * திருவள்ளூர் மாவட்டத்தில் கீரை, மிளகாய், கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம், தென்காசி மாவட்டத்தில் எலும்பிச்சை, நெல்லி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப்படுத்தல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.. இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்

    * காய்கறி பயிரிடவும், 638 எக்டர் பரப்பில் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகளை பயிரிடவும் அனைத்து மாவட்டங்களிலும் 1000 எக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்படும்..இந்த திட்டம் 95 கோடி ரூபாய் செலவில் மாநில ஒன்றிய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படும்

    * கரும்பு விவசாயிகளின் கோரிக்கையினை " சிறப்பு ஊக்கத்தொகையாக " டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாகக் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் மூலம் விவசாயிகள் கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: