ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு.. - அமைச்சர் அன்பில் மகேஷ்

மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு.. - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 473 ஆக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “மாணவர்களின் நலனை கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து மதிப்பெண்களை கணக்கிட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மதிப்பெண் பட்டியலும் விரைவில் வெளியிட தமிழக முதல்வரின் அறிவுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 473 ஆக உள்ளது. இதில் 30600 பேர் 550 - 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் யாரும் இல்லை. பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு தேர்ச்சி கிடையாது.

மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மார்க்குகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரீசிலித்து முடிவு எடுக்கப்படும். ” என்றார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: 12th Exam results, Anbil Mahesh Poyyamozhi, Education department, Tamilnadu