10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது..

10, 12 தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது,

 • Share this:
  10 மற்றும் 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது,

  அதன்படி,10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்றும், 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாளும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்திருந்தது.  பிளஸ்-1 துணைத்தேர்வு முடிவு நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3, 4-ஆம் தேதிகளில் பதிவு செய்யலாம்.

  மாணவர்கள் http://dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  Published by:Gunavathy
  First published: