தேஜஸ் ரயிலுக்கு தமிழ் சங்கம் என்று பெயர் மாற்ற தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை!

தேஜஸ் ரயிலுக்கு தமிழ் சங்கம் என்று பெயர் மாற்ற தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை!
எம்.பி.க்கள் - ரயில்வே அதிகாரிகள் கூட்டம்
  • News18
  • Last Updated: September 5, 2019, 9:00 AM IST
  • Share this:
தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக எம்பி-க்கள் ஒருமித்த குரலில் இதை வலியுறுத்தினர்.

திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்களில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் நடந்த இக்கூட்டத்தில், இவ்விரு மண்டலங்களைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பங்கேற்றனர். அத்துடன், கேரளா மற்றும் புதுச்சேரி சார்பிலும் எம்.பி.-கள் கலந்து கொண்டனர். இதில், தங்கள் பகுதியில் மேம்படுத்தவுள்ள ரயில்வே பணிகள், புதிய சேவைகள், வழித்தடங்கள் குறித்து எம்பிக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.


அதன்படி, திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு இண்டர் சிட்டி ரயில் இயக்கவும், திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக சேலத்திற்கு பயணிகள் ரயில் இயக்கவும் கோரினர்.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு சிறப்பு ரயிலை இயக்கவும் அந்த மண்டலத்தின் எம்பி-க்கள் வலியுறுத்தினர்.

தேஜஸ் ரயிலுக்கு தமிழ் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய அனைவரும் கையெழுத்திட்டு ரயில்வே துறையிடம் வழங்கினர். குறிப்பாக, ரயில்வே பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், ரயில் நிலையங்களில் தமிழ் மொழி பேசுவோரையே நியமிக்க வேண்டும் எனவும் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் வலியுறுத்தினர்.கூட்டத்துக்குப் பின் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்புனர் திருச்சி சிவா, தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் துரிதமாக செயல்படுத்த கூறியுள்ளோம் என்றார்.மேலும், மதுரை - போடி அகல ரயில் பாதைத் திட்டததை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் கோரியுள்ளார்.

இதற்கிடையில், சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த தமிழச்சி, சைதாப்பேட்டையை பசுமை ரயில் நிலையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்