அதிமுக தொகுதி பங்கீடு: 12 தொகுதிகளை கோரியது தமாகா

அதிமுக தொகுதி பங்கீடு: 12 தொகுதிகளை கோரியது தமாகா

ஜி.கே.வாசன்

சைக்கிள் சின்னத்தை மீட்க உதவியாக இருக்கும் என கோரிக்கை

  • Share this:
    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ், 12 சட்டமன்ற தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அது சைக்கிள் சின்னத்தை மீட்க உதவியாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

    இன்று, அதிமுக தொகுதி பங்கீட்டு  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் அமைச்சர் வேலுமணியை சந்தித்தார் தமாகா மூத்த நிர்வாகி கோவை தங்கம்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 12 தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்ததாகவும், இது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் ஆலோசனை நடத்தி, தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் பேசுவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்ததாகவும் கோவை தங்கம் கூறினார்.

    அதிமுக கூட்டணில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு மட்டுமே இதுவரையில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்ட பிற கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

    Must Read : அ.தி.மு.க, தே.மு.தி.க இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

    இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: