Live updates : தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு

இன்றைய (மே 30, 2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நீயூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

  • News18 Tamil
  • | May 30, 2022, 08:30 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    13:16 (IST)

    சென்னையில் எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 13 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டதாக வெறும் குறுஞ்செய்தி மட்டுமே சென்றதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

    13:15 (IST)
    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் அதிகரித்து விட்டதாகவும், ஊழல் செய்வதில் முதன்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
    13:2 (IST)

    சிறுவாச்சூர் கோயில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்த புகாரில், யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்

    கார்த்திக் கோபிநாத் கைது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தங்களுக்கு எதிராக பேசுவோரை மிரட்டும் உத்தியை தமிழக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்று சாடினார். கார்த்திக் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்கு உரியது என்றும், . அவருக்கு தமிழக பா.ஜ.க துணை நிற்பதுடன், தேவையான சட்ட உதவிகள் வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோயில் மராமத்து பணி மேற்கொள்ள பொதுமக்களிடம் பணம் வசூலித்ததற்காக, கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீசார் கைது செய்தது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இது, அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவை மீறும் செயல் என்பதால் போலீசாருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

    13:1 (IST)
    மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
    8:29 (IST)

    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி  -  குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு

    தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு 1,42 ,175  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 8,000 அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    5:29 (IST)

    ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

    செங்கல்பட்டு மாவட்டம்  மேலவலம்பேட்டை பகுதியில்  சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 20க்கும் மேற்பட்டோர் காயம் சம்பவ இடத்திலே ஒருவர் பலி.