உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழிலும் வெளியாக வேண்டும்! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின்

இந்திய அரசயில் சட்டத்தின் 8-வது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது.  அதே வேளையில், செம்மொழியாம் தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மாநில மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடவுள்ள முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது என்றார்.

இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட 5 மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்ச நீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இந்திய அரசயில் சட்டத்தின் 8-வது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க...  வடஆற்காடு மக்கள் பெருந்தன்மையோடு வரவேற்பார்கள்: ஏசி சண்முகம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: