வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரம், மொழி முக்கியமானது - ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரம், மொழி முக்கியமானது - ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ராகுல் காந்தி

வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரம், மொழி முக்கியமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 11 40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

    அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மூத்த நிர்வாகிகள் சுதர்சன நாச்சியப்பன் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல்காந்தி புறப்பட்டுச் சென்றார். பார்வையாளர்கள் மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து ராகுல் காந்தி ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தார். அவருடன் இணைந்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்தனர்.

    அந்த விழாவின்போது பேசிய ராகுல் காந்தி, ‘உங்கள் கலாசாரம், பண்பாடு அறிந்த கொள்ள வந்துள்ளேன். விழா ஏற்பாடு நிறைவாக உள்ளது. வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரம், மொழி முக்கியமானது. தமிழ் மொழி, கலாச்சாரம் செழிக்க பாடுபடுவர்களுக்கு வாழ்த்துகள்.

    தமிழக மக்களோடு சேர்ந்து உறுதுணையாக இருப்பேன். மாடு பிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் நன்றி.. பாராட்டு’என்று தெரிவித்தார். அறைமணி நேரம் வரை இருந்து போட்டியைப் பார்த்தவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: