முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு

தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு

தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு

தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு

PM modi | பெருமை மிகுந்த பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று மிக அழகாக பாடியுள்ளார் என்று பிரதமர் மோடி கூறினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சார்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளக்குகின்றனர் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரெயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் வந்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே வணக்கம். மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது என்பது, எப்போதுமே மிக அருமையாக இருக்கும் ஒன்று, இது மிக சிறப்பான ஒரு பூமி, இந்த மாநிலத்தின் மக்கள், கலாச்சாரம், மொழி என அனைத்துமே மிகச் சிறப்பானவை. பெருமை மிகுந்த பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று மிக அழகாக பாடியுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சார்ந்த யாராவது ஒருவர், தலைசிறந்தவராக விளக்குகின்றனர். அண்மையில் தான் நான் இந்திய காது கேளாதவர்களுக்கான ஒலிம்பிக் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். இதுவரை நடந்த போட்டியில் இதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 6 பேருக்கு பங்கு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அணிக்கு இது மிகச்சிறந்த பங்களிப்புகளில் ஒன்று.

தமிழ்மொழி நிலையானது, நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியளானது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆடையில் எல்.முருகன் சிவப்பு கம்பளத்தில் நடை போட்டார். இது உலங்கெங்கிலும் உள்ள தமிழர்களை பெருமிதம் கொள்ள செய்தது என்றார்.

First published:

Tags: PM Modi