புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மொட்டை அடித்து போராட்டம் - அய்யாகண்ணு தகவல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தமிழக விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மொட்டை அடித்து போராட்டம் - அய்யாகண்ணு தகவல்
அய்யாகண்ணு
  • Share this:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக விவசாயிகள் 5,000 பேர் மொட்டை அடித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அய்யாக்காண்ணு அறிவித்துள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.

Also read: ’தமிழ்நாடு நாளை’ அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டும் - முதல்வருக்கு சீமான் கோரிக்கை

அந்தக் கூட்டத்தில் பேசிய அய்யாகண்ணு, கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழக விவசாயிகள் மொட்டை அடித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக கூறினார்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading