ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சியில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..!

திருச்சியில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..!

நயன்தாரா

நயன்தாரா

Nayanthara : நயன்தாராவுடன் 'செல்பி' எடுக்க விரும்பிய மாற்றுத் திறனாளி பெண் ஒருவருடன், பொறுமையாக நின்று 'செல்பி' எடுத்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவின்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யவிருக்கிறார். காதலர்களாக வலம் வந்த இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பாக, பல்வேறு கோயில்களில் நயன்தாரா இணையர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.

விமான நிலையத்தில் "திருச்சி மாவட்டத்தின் மருமகளாக போகின்ற உங்களுக்கு வாழ்த்துகள்" என்று செய்தியாளர் ஒருவர் கூறியதற்கு புன்னகையை மட்டுமே நயன்தாரா பதிலாக தந்தார். மற்றபடி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், நயன்தாராவுடன் 'செல்பி' எடுக்க விரும்பிய மாற்றுத் திறனாளி பெண் ஒருவருடன், இருவரும் பொறுமையாக நின்று 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வமான ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு  இருவரும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சென்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Director vignesh shivan, Nayanthara, Tamil News, Trichy Airport, Vignesh Shivan