Home /News /tamil-nadu /

கடிதம் எழுதிவைத்து பிரபல நடிகை தற்கொலை.. டைரக்டருடன் காதலா ? - போலீஸ் விசாரணை

கடிதம் எழுதிவைத்து பிரபல நடிகை தற்கொலை.. டைரக்டருடன் காதலா ? - போலீஸ் விசாரணை

நடிகை

நடிகை

Chennai: கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து போன நடிகை பெளலின் ஜெசிக்கா சினிமா டைரக்டர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாய்தா திரைப்பட கதாநாயகி தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்தவர் துணை நடிகை பெளலின் ஜெசிகா (எ) தீபா(29). பட்டப்படிப்பு படித்துள்ள பெளலின் ஜெசிகா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா நடிக்கும் ஆசையில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை வந்தார். சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.

டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக YouTube ஷார்ட் வீடியோஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளங்களையே இவர் வைத்திருந்தார். இவரின் குறும்புத்தனமான நடிப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவையாகும்.

தொடர்ந்து சீரியல்களிலும், அதன்பின் தெறி, துப்பறிவாளன், ராட்சன் ஆகிய திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில்,  புகழ் மகேந்திரன் என்பவர் ஹீரோவாக நடித்த ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார்.

ALSO READ | மாணவிகளின் குளியல் காட்சிகளை படமாக்கி, ஆண் நண்பருக்கு பகிர்ந்த சகமாணவி... அதிர்ச்சி சம்பவம்

சினிமா ஷூட்டிங் சென்று வந்த பிறகு தினந்தோறும் அந்திராவிலுள்ள தனது குடும்பத்தினருக்கு போன் செய்து வந்த இவர் சில தினங்களாக வீட்டுக்கு போன் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பார்ட்மெண்ட் உரிமையாளர், தனது வீட்டில் தங்கி இருக்கும் சினிமா நடிகையின் வீடு பூட்டி உள்ளதாகவும், பல மணி நேரம் கதவை தட்டியும், கதவை திறக்கவில்லை எனவும் கோயம்பேடு போலீசாருக்கு நேற்று மாலை தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது சினிமா நடிகையான பௌலின் ஜெசிகா(எ) தீபா துப்பட்டாவால் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக நடிகையின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நடிகை  பெளலின் ஜெசிகா(எ) தீபா எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், "ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால், காதல் கைக்கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதியுள்ளார்.

ALSO READ | குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமை... 28 ஆண்டுகளுக்குப் பின் புகார் அளித்த பெண்

கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து போன நடிகை பெளலின் ஜெசிக்கா(எ) தீபா சினிமா டைரக்டர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை அந்த டைரக்டருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக போனில் பேசியுள்ளதும் தெரியவந்தது. அதன் பின் பெளலின் ஜெசிகா(எ) தீபா போனை எடுக்காததால் சினிமா டைரக்டர் வீட்டு உரிமையாளரிடம் தகவலை சொல்லியுள்ளார்.

அதன் பின்பு வீட்டு உரிமையாளர் கதவைத் தட்டியும் நடிகை கதவை திறக்காததால் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published by:Anupriyam K
First published:

Tags: Actress, Crime News, Suicide

அடுத்த செய்தி