செயின் பறிப்பில் சிக்கிய சினிமா ஹீரோ - சிசிடிவி வீடியோ வெளியீடு

Youtube Video

செயின்பறிப்பில் ஈடுபட்ட, திரைப்பட கதாநாயகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  காரைக்குடி செஞ்சை நாச்சுழியேந்தலைச் சேர்ந்த 49 வயது குழந்தையம்மாள், பிப்ரவரி 14ம் தேதி காலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது முககவசம் அணிந்து இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்கள் அவர் முகத்தில் ஸ்ப்ரே அடித்து மிளகாய்ப் பொடி தூவி அவரது கழுத்தில் இருந்த நான்கரை பவுன் செயினைப் பறித்துச் சென்றனர்.

  இந்நிலையில் குழந்தையம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவிக்களை ஆய்வு செய்தபோது அவற்றில், 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவியில் பதிவான வாகன எண்ணை வைத்து விசாரித்தபோது குற்றவாளிகள் செயினைப் பறித்துக் கொண்டு தேவகோட்டை ரஸ்தா, ஆறாவயல், கண்டனூர் சாலை வழியாக காரைக்குடி, சுப்பிரமணியபுரம் 10வது வீதியில் புகுந்தது தெரியவந்தது.

  அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் தான் செயின்பறித்தவர் என்பதும், தேவகோட்டை கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த 39 வயதான சீனிவாசன் என்பதும் தெரியவந்தது.

  சீனிவாசன், தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் ஸ்டூடியோ நடத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆபாசப் படங்கள் எடுத்து கைதானவர். அதன்பின் சென்னை சென்று திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். அங்கு கேரளாவைச் சேர்ந்த காசிம் என்பவரின் தயாரிப்பில், 70 லட்சம் ரூபாய் செலவில், 2019ம் ஆண்டு வெளியான தேவகோட்டை காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

  மேலும் படிக்க...ராணிப்பேட்டையில் பிரபல ரவுடி பிளேடு நித்யாநந்தன் கழுத்து அறுத்து கொலை

  அடுத்த திரைப்படம் எடுப்பதற்காக, காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் தங்கியிருந்துள்ளார். செயின்பறிப்பின் போது வாகனம் ஓட்டிய நபர், திரைத்துறையில் துணை நடிகராக உள்ள ஆசிக் ரகுமான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனிவாசன் கைது செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், ஆஷிக் ரகுமானும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: