'அன்னை தமிழில் அர்ச்சனை' இன்று முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை

மாதிரிப் படம்

1971ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி இதே திட்டத்தை பல்வேறு எதிர்ப்புக்கு மத்தயில் கொண்டுவந்தார்.

  • Share this:
    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது.

    தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் பெயரளவில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது. இதனால், தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார்.

    அதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். வெள்ளிக்கிழமை முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது.

    Also Read : தாய் மொழி தமிழில் அர்ச்சனை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி - கபாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர்

    இதன்மூலம் திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    1971ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி இதே திட்டத்தை பல்வேறு எதிர்ப்புக்கு மத்தயில் கொண்டுவந்தார். அப்போதே இந்த திட்டம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கபாலீஸ்வர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்த குமார குருக்களின் மகன் வெங்கட் சுப்பிரமணியன் தற்போது அதேகோயிலில் தமிழில் மந்திரத்தை ஓத ஆர்வமுடன் உள்ளார்.

    பல்வேறு கால கட்டங்களில் பல போராட்டங்களை தாண்டி தற்போது கோயில் கருவறையிலும் அதிகாரத்துடன் தமிழ் மொழி ஓதப்படுவது வரவேற்கத்தக்கது என கூறுகிறார் சத்தியவேல் முருகனார். தமிழகத்தில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு திருவாடுதுறை ஆதீனமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    Also Read : தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை... பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்?

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: