சாத்தான்குளம் இரட்டை மரணம்: தமிழகம் தாண்டி பாலிவுட் வரை கொதித்தெழும் குரல்கள்..

சாத்தான்குளம் தந்தை, மகன், சிறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரை உலகைத் தாண்டி பாலிவுட் திரை நட்சத்திரங்கள் வரையில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
அமெரிக்க போலீசாரால் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் கழுத்து நெறித்து கொல்லப்பட்ட தாக்கம் உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அடங்குவதற்குள் தமிழகத்தில் கோவில்பட்டியை அடுத்துள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உயிரிழந்த தந்தை மகன்.


காவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால்தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.


தந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வியாபாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில் திரைநட்சத்திரங்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். தனி ஒருவன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்த ஜெயம் ரவி சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை எனவும் மனித தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் எனவும் தனது குரலை பதிவு செய்தார்.

நடிகர் ஜெயம் ரவி


இதையடுத்து திரை நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி, கதிர், ரைசா வில்சன் வரை அதிகம் பிரபலம் அடையாத நட்சத்திரங்களும் கூட இவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கினர்.இந்த சமயத்தில் பாடகி சுசித்ரா இந்த விவகாரம் தென்னிந்தியாவில் முடிந்து விடக்கூடாது என கூறி நடந்தவற்றை ஆங்கிலத்தில் பேசி வலை தளங்களில் பதிவேற்றி இந்தியா முழுக்க உள்ள திரை நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்தார்.


இதை அடுத்து #JusticeforJayarajAndFenix என்ற பெயரில் ஒரு ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகத் தொடங்கியது. இந்தியா முழுக்க உள்ள திரை நட்சத்திரங்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யத் துவங்கினர்.

பாலிவுட் நட்சத்திரங்களான ரித்தேஷ் தேஷ்முக், சம்யுக்தா ஹெக்டே என பலரும் காவல்துறைக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். இதையடுத்து தமிழ் நடிகர்களும் இதே பெயரில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் இந்த கொடூர செயலுக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதி வழங்காவிட்டால் அந்த சமூகம் தனக்கான நீதியை பெற்றுக் கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்


இதற்கிடையே காவல்துறையினரின் இந்த கொடூர செயலை கண்டித்து மீம்ஸ் வடிவிலும் கண்டன குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. அரசு பொது மக்களை நோக்கி மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்துறையை அணுகவும் என கூற மக்கள் எங்களுக்கு பிரச்சனையே காவல்துறையால்தான் என பதில் அளிப்பது போல ஒரு மீமும் சமூகவலைதளத்தில் அதிகம் வரத் துவங்கியுள்ளது.

மேலும் படிக்க: 

சாத்தான்குளம் இரட்டை மரணம்...பகீர் ஆடியோ...குவியும் புகார்... நடந்தது என்ன?

ஊரடங்கு காலத்தில் வைரஸ் தொற்றின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வந்த காவல்துறையினர் பொதுமக்கள் சிலாகித்து வந்த நேரத்தில் சாத்தான்குளம் பயங்கரம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான மக்களின் பார்வையையும் மாற்றியுள்ளது தான் துயரம்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading