தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் ஆயிரத்தை நெருங்கியது

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தற்போது வரை கொரோனா பரவல் தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்ததிருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 83,204 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 8,86,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,527 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 8,58,075 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

  அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,719 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 969 பேருக்கும், செங்கல்பட்டில் 250 பேருக்கும், கோயம்புத்தூரில் 273 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: