Home /News /tamil-nadu /

தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயில் இனி தினசரி இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயில் இனி தினசரி இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Southern Railway : தாம்பரம்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில் வரும் 16 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்கள் வரும் 16 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரவில்வே அறிவித்துள்ளது.

    கொரோனா பாதிப்புக்கு பின்னர், தாம்பரம் - விழுப்புரம் இடையே முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ரயில்கள் தற்போது வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், பயணியரின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் - விழுப்புரம் பயணியர் ரயில் வரும் 16ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என தொற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Must Read : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

    இதேபோல, மறு மார்க்கத்தில் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில், வரும் 17ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Southern railway, Tambaram, Train, Villupuram

    அடுத்த செய்தி