Home /News /tamil-nadu /

மெக்கானிக் உயிரைப் பறித்த லாரி டயர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மெக்கானிக் உயிரைப் பறித்த லாரி டயர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

லாரி டயர் வெடித்து விபத்து

லாரி டயர் வெடித்து விபத்து

டயரில் காத்து அதிகளவில் பிடித்ததால் எதிர்பாராத விதமாக திடீரென லாரி டயர் வெடித்து சிதறியது.

    தாம்பரம் அருகே லாரி டயர்க்கு பஞ்சர் போடும் போது டயர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 40) இவர் தாம்பரத்தில் இருந்து கிஷ்கிந்தா செல்லும் சாலையில் லாரி டயர்களுக்கு பஞ்சர் போடும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ் லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் போட்டு கொண்டிருந்தார். அப்போது டயரில் காத்து அதிகளவில் பிடித்ததால் எதிர்பாராத விதமாக திடீரென லாரி டயர் வெடித்து சிதறியது. இதில் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் இரத்த கயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் தாம்பரம் போலீஸார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி டயர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, CCTV Footage, Chennai, Death, Tambaram, Tanker lorry

    அடுத்த செய்தி