• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்: தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்: தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்: தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்: தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
    தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

    இந்நிலையில், சட்டப்பேரவையில் நகராட்சி நி்ர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு, “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சி அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

    அந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய மாநகராட்சி குறித்த அரசாணையை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

    அதன்படி, புதிய மாநகராட்சியில் தாம்பரத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைக்கவும், கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளையும் இணைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இது தவிர, தாம்பரம் நகராட்சி எல்லையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தாம்பரம் நகராட்சிக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே, தாம்பரம் நகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான குடிநீ்ர், பாதாள சாக்கடை போன்றவற்றை விரிவுபடுத்தப்படும் என்றும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இணைந்துள்ளதால், அதற்கு ஈடாக தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தன் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: