Home /News /tamil-nadu /

தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகங்கள்: 16 பேருக்கு பதவி உயர்வு

தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகங்கள்: 16 பேருக்கு பதவி உயர்வு

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைப்பு

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைப்பு

சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்புக் காவல்படை 2ஆம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

    தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்கான  காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

    இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.


    இதன் ஒரு பகுதியாக, முதல்வர் ஸ்டாலின் 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

    அதன்படி, சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்புக் காவல்படை 2ஆம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதல்வர் (1.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

    இதையும் படிங்க: 15-18 வயது சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு ஏற்பாடு






    தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கிச் செயல்படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளன.

    ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கிச் செயல்படும். நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படுவதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் குற்றங்களைத் தடுப்பதற்கும், போக்குவரத்தைச் சீர்படுத்துவதற்கும், சட்டம் - ஒழுங்கு தொடர்பான மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் வழிவகை ஏற்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க: கீழடியில் மேற்கொண்ட அகழ்வாய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்


    புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையராக ரவி, ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுபோல 16 எஸ்.பி.க்களை டிஐஜிக்களாக பதவி உயர்வு வழங்கியும் தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Avadi, MK Stalin, Tambaram

    அடுத்த செய்தி