முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு: கழிவுநீர்தொட்டி சுத்தம் செய்தபோது விபரீதம்

விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு: கழிவுநீர்தொட்டி சுத்தம் செய்தபோது விபரீதம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராஜேஷ் (வயது-35), ஏழுமலை (வயது-35) இருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையை அடுத்த  தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தபோது  இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி,டி,சி கோட்ரஸ் குடியிருப்பில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வீட்டில் ராஜேஷ் (வயது-35), ஏழுமலை (வயது-35) இருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  கழிவுநீர் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் மணிமங்கலம் போலீஸார்க்கும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் கழிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விசவாயு தாக்கி இருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: காவலர்களின் குறைகளை போக்கிட புதிய காவல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

First published:

Tags: Death, Tambaram