அதிமுக-தேமுதிக இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-தேமுதிக இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை என தகவல்

விஜயகாந்த்

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த்’ என்றும் ‘நமது சின்னம் முரசு’ எனவும் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபப்பை ஏற்படுத்தி இருந்தார்.

 • Share this:
  தேமுதிகவினரை தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அதிமுக தரப்பில் இருந்து, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை தேமுதிக ஏற்றுள்ளதாகவும், இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  நேற்று அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை புறக்கணித்த  நிலையில், இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக என தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரேமலதா விஜயகாந்த்துடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாமல், இழுபறி நீடித்து வருகின்றது.

  தங்கள் கட்சிக்கு, 23 இடங்களை ஒதுக்க வேண்டும் என, தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால், 10 முதல் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின.

  இந்நிலையில், நேற்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் ‘நமது முதல்வர் விஜயகாந்த்’ என்றும் ‘நமது சின்னம் முரசு’ எனவும் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபப்பை ஏற்படுத்தி இருந்தார்.

  Must Read: தேமுதிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக: கூட்டணி தொடருமா?

   

  அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையான எண்ணிக்கையில் தங்களுக்கும் தொகுதிகள் வேண்டும் என தேமுதிக தரபிப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: