Home /News /tamil-nadu /

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்திட வேண்டும்: அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்திட வேண்டும்: அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

கடந்த டிசம்பர் 30ம் தேதி சென்னையில் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்தது என்றும் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னையில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. விடாமல் பெய்த இந்த மழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்,  நிலப்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சியை கடலில் இருப்பதாக கணித்துவிட்டோம். நிலப்பகுதியில் இருந்ததை கணிக்க தவறிவிட்டோம். இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்தளவு தான் கணிக்க முடிகிறது என விளக்கம் அளித்தது.

    சென்னை வானிலை மையத்தின் ரேடார்கள் சரிவர இயங்கவில்லை என குற்றச்சாட்டை பலரும் முன்வைத்து வரும் நிலையில், இதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த திடீர் மழை அமைந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில்,  பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த  முக்கிய விஷயத்தினை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகலை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்தில் இருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தினை தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால்,  பெருமழை குறித்த அறிவிப்புகள்  உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதை காண்கிறோம்.

    இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி


    உதாரணமாக கடந்த டிசம்பர் 30ம் தேதி சென்னையில் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாக கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.

    எனவே, பெருமழை புயல் போன்ற ரெட் அலர்ட் குழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம் தடை : சென்னை முழுவதும் 13 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.. வெறிச்சோடிய சாலைகள்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Amit Shah, Meteorological Center, MK Stalin

    அடுத்த செய்தி