• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ்

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ்.

  • Share this:
    போதிய மாணவர்கள் இல்லாததால், குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பிட்டிருப்பதாவது:
    ”குஜராத் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி  மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை  தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ்ப்பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”.






    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: