• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண் பத்திரிகையாளர்களை குறிவைத்து அவதூறு - நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை

பெண் பத்திரிகையாளர்களை குறிவைத்து அவதூறு - நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை

பத்திரிகையாளர்களைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

  • Share this:
சமூக வலைதளங்களில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி சில நபர்கள் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக 14 முறை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த புகாருக்கு காவல் துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் சி.பி.எம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உட்பட 60க்கும் மேற்பட்டோர்  காவல் ஆணையர் அலுவலகத்தை  முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்றனர்.

Also read: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த வெற்றி - வைகோ

காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றையிட வந்தவர்களை எழும்பூர் ரயில் நிலையம் அருகே வேப்பேரி போலீசார் தடுத்து நிறுத்தி பெண்கள் உட்பட 60 பேரைக் கைது செய்துள்ளனர்.
இப்போராட்டம் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: