ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டத்தை மீறி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக தூத்துக்குடியில் மாபெரும் மக்கள் திரள் கூடியது. போராட்டத்தில் 13 உயிர்கள் பலிகொண்ட பின் மே 28-ம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசாணைப் பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா குழுமம். இந்த வழக்கில், தமிழக அரசின் தடை உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் இன்று அனுமதியளித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டெர்லைட் ஆலைஅனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மார்க்ஸிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ’தற்போது 144 தடை உத்தரவு தேவையில்லை. சட்டத்தை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள தாமிர மூலப் பொருட்களை எடுத்துச் செல்லவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளே, எந்தப் பொருளையும் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்லூரி முதல்வர்களிடம் பேசியுள்ளேன். யாரும் போராட்டத்தை தூண்டவேண்டாம். யார் சட்டத்தை மீறினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Also see:
Published by:Karthick S
First published: