தென்கிழக்கு ஆசிய நாடான தைவான், தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக தொழில்முதலீடு செய்துள்ள நிலையில், அந்த முதலீடுகளை இரட்டிப்பாக முனைவதாக தைபே பொருளாதார மற்றும் கலாசார மைய துணை ஜெனரல் பென் வாங் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் தைவானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை மேலும் மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் இந்த முதலீடுகள் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தைவானின் முதலீட்டை இரட்டிப்பாக்கவும், ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
எட்டு நாடுகளுக்கு 54.4 மில்லியன் மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்களை தைவான் வழங்கியுள்ளது. இந்தியாவுக்கும் ஒரு மில்லியன் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
தைவானைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அளவு, இரட்டிப்பாகும் பட்சத்தில் லட்சக்கணக்கான நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Taiwan