தஹில் ரமானி ராஜினாமா முடிவு கொலிஜியத்தை அவமதிக்கும் செயல் - அகில இந்திய பார் கவுன்சில்

மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியபோது, அதனை ஏற்றக்கொண்டது போல், மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

news18-tamil
Updated: September 11, 2019, 9:56 PM IST
தஹில் ரமானி ராஜினாமா முடிவு கொலிஜியத்தை அவமதிக்கும் செயல் - அகில இந்திய பார் கவுன்சில்
தஹில் ரமானி
news18-tamil
Updated: September 11, 2019, 9:56 PM IST
தஹில் ரமானியின் ராஜினாமா முடிவு கொலிஜியத்தை அவமதிப்பதாக உள்ளதாகவும், மேகாலயாவிற்கு மாற்றிய கொலிஜியத்தின் முடிவை தஹில் ரமானி ஏற்க வேண்டும் எனவும், அகில இந்திய பார் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான தஹில் ரமானியை, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்வதற்கு, கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனைதொடர்ந்து, தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, தஹில் ரமானியின் இடமாற்றத்தை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தநிலையில், அவரது ராஜினாமா முடிவு கொலிஜியத்தை அவமதிப்பதாக உள்ளதாக அகில இந்திய பார் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.

ரமானி மீது கொலிஜியத்தில் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாதபோது, இடமாறுதலை ஏற்காதது ஏன் எனவும் பார் கவுன்சில் கேள்வி எழுப்பியுள்ளது. சிறிய நீதிமன்றங்களில் பணியாற்றுவதை தலைமை நீதிபதிகள் தவிர்த்தால், இந்திய நீதித்துறையின் நிலைமை என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியபோது, அதனை ஏற்றக்கொண்டது போல், மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே கொலிஜியம் உத்தரவை ஏற்கவேண்டும் என்றும், தஹில் ரமானியின் இடமாறுதல் ஆணையை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும், அகில இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

Loading...

Also Watch

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...