முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம்! டி.டி.வி.தினகரன் மலரஞ்சலி

ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம்! டி.டி.வி.தினகரன் மலரஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர். காலை 10- மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் ஆயிரக்கணக்கானோர் வாலாஜா சாலையில் ஊர்வலமாகச் சென்று, மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழி வாசிக்க மற்ற உறுப்பினர்கள், அதனை மீண்டும் சொல்லி உறுதி ஏற்றனர். அதனையடுத்து, மதியம் 2 மணியளவில் டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.கவினர் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்று மலரஞ்சலி செலுத்தினர். திறந்த வாகனத்தில் சென்ற டி.டி.வி.தினகரனுடன் அவரது ஆதரவாளர்கள் தங்கத் தமிழ்செல்வன், பழனியப்பன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சென்றனர்.

வாலாஜா சாலை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வழியாக கடற்கரை காமராஜர் சாலைக்கு சென்றது. அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்ற டி.டி.வி.தினகரன், மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.

Also see:

First published:

Tags: Jayalalithaa, TTV Dinakaran