அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது தி.மு.க. - டி.டி.வி.தினகரன் விமர்சனம்
ஆர்.கே. நகரில் என்னிடம் டெபாசிட் இழந்ததிலிருந்து தி.மு.க எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிவருகிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன்
- News18
- Last Updated: December 14, 2018, 4:37 PM IST
அ.ம.மு.க.விலிருந்து ஒரே ஒரு நிர்வாகி கட்சியில் சேர்ந்ததை விழா போன்று கொண்டாடும் அளவுக்கு தி.மு.க பலவீனமாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க பிரிவுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். அதன்காரணமாக, சபாநாயகரின் உத்தரவால் அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிபோனது. இந்தநிலையில், கடந்த ஒரு வார காலமாக செந்தில் பாலாஜி, அ.ம.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணையவுள்ளார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்தநிலையில், இன்று காலையில் செந்தில் பாலாஜி அவரது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து கொண்டார். தி.மு.கவில் இணைந்த பிறகு பேசிய அவர், ‘மு.க.ஸ்டாலினை முதல்வராக்கப் பாடுபடுவேன்’ என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி, தி.மு.கவில் இணைந்தது குறித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ‘ஒவ்வொருவரும் கட்சியில் இருப்பதும் விலகுவதும் அவரவர் விருப்பம். யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில் பாலாஜி, தி.மு.கவில் இணைந்ததில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நான்கு தொகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான 4,000 விண்ணப்பங்களைத் திரும்பத் தராமல் சென்று விட்டார். அதனால், பல நிர்வாகிகள் தொண்டர்களின் உழைப்பு வீணாகியுள்ளது. அதுதான் வருத்தமாக உள்ளது. அ.ம.மு.கவிலிருந்து ஒரே ஒரு நிர்வாகி, தி.மு.கவில் இணைந்ததை அவர்கள் விழா போன்று கொண்டாடுகின்றனர். இதிலிருந்து தி.மு.க எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்று தெரிகிறது. ஆர்.கே.நகரில் என்னிடம் டெபாசிட் இழந்ததிலிருந்து தி.மு.க எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிவருகிறது. தி.மு.க அற்ப காரியங்களைச் செய்து சந்தோஷம் கொள்கிறது’ என்று தெரிவித்தார்.
Also see:
அ.தி.மு.க பிரிவுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். அதன்காரணமாக, சபாநாயகரின் உத்தரவால் அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிபோனது. இந்தநிலையில், கடந்த ஒரு வார காலமாக செந்தில் பாலாஜி, அ.ம.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணையவுள்ளார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்தநிலையில், இன்று காலையில் செந்தில் பாலாஜி அவரது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து கொண்டார்.