சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது சிலருக்கு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் - டி.ராஜேந்தர்!

டி ராஜேந்தர்

எந்த கஷ்டமும் இல்லாமல் முதல்வர் ஆனதால் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் கஷ்டம் புரியவில்லை என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நான் மாற்று அணி உருவாக்கினால் அது சில பேருக்கு வேட்டு அணியாக மாறிவிடும் என்று அண்ணா நினைவிடத்தில் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் கௌரவ ஆலோசகர் டி.ராஜேந்திரன் தலைவர் உஷா ராஜேந்தரும் அண்ணா கருணாநிதி ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பேசிய டி.ராஜேந்தர், எந்த கஷ்டமும் இல்லாமல் முதல்வர் ஆனதால் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் கஷ்டம் புரியவில்லை என்று கூறினார்.

பழனிசாமிக்கு முதல்வர் ஆன நாள் முதல் இன்றுவரை சினிமா துறைக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று முதல்வர் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். அதனால் எங்களது கோரிக்கைகளை இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் 4 ஆன்மாவிடம் முறையிட வந்திருக்கிறோம் என்று கூறினார் டி.ராஜேந்தர்.

Also read... யுவனின் செயலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட செல்வராகவன்

சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது தொடர்ந்து பேசிய டி ராஜேந்தர் அதனால் சிலருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று பேசினார். எங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், உருவாக்குவோம் கூட்டணி அல்லது உருவாகும் மாற்றணி என்றார் டி.ராஜேந்தர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: