சமீப காலமாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் வீடியோகள் இணையத்தில் தொடர்ந்து உலாவருகின்றன. வகுப்பறையில் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்தும்போதே அவர்களிடம் வன்முறையில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பள்ளி வகுப்பறையிலுள்ள மேஜை, நாற்காலிகளை மாணவர்கள் உடைக்கும் வீடியோ ஒன்று வெளிவந்தது.
இந்தநிலையில் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘இணையத்தில் வலம் வரும் காணொலிகளை பார்த்து “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற மனநிலையில் பேசுகிறேன். போதிய வருமானம் இல்லாத பெற்றோர்களே அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்களே! உங்கள் பெற்றோரிடம் சொத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. உங்கள் அரசுப்பள்ளி தான் உங்கள் சொத்து! அங்குள்ள மைதானம், வகுப்பறை, மேஜை, நாற்காலிகள், அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைத்தும் உங்கள் சொத்து!
அந்த ஆசிரியர்களால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். ஆனால் தற்போது ஆசிரியர்களை தாக்க மாணவர்கள் கை ஓங்குவதைப் பார்க்க முடிகிறது. எப்படி இந்தச் சூழல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த ஆசிரியர்கள் நமக்கு கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, கணிப்பொறி ஆகியவற்றை நமக்கு சொல்லித் தருவார்கள். இவர்கள் நமக்கு மிகப்பெரிய சொத்து. நம் கற்றுக் கொள்வதற்கான ஆதாரம். அறிவையையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற வன்முறைச் செயல்களில் ஏன் ஈடுபடுகிறீர்கள்? இது நம் வீட்டை நாமே தீவைத்து கொளுத்துவது போல உள்ளது.
View this post on Instagram
நம் கைகால்களை நாமே வெட்டுவது போல, நமக்கான ஆதாரங்களை நாமே அழிக்கலாமா? கடவுளுக்கும் மேலான அவர்களிடமா இந்த வன்முறை? தயவுசெய்து இது போன்ற செயல்களை இனி செய்யாதீர்கள். நீங்கள் முழு மனிதனாக, செயல்திறன் மிக்கவராக, சிந்தனையாளராக மாற தயார் செய்யும் பயிற்சிக்கூடம் தான் பள்ளிக்கூடம்.
காதல் விவகாரம்: திருப்பூரில் காதலனுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவி
அந்த இடத்திற்கு ரொம்ப மரியாதை கொடுக்க வேண்டும். ஆசிரியப் பெருமக்களை உயர்வாக எண்ண வேண்டும். உங்களுடைய மனநிலை மாற வேண்டும். பள்ளிக்கூடங்களில் வன்முறையில் ஈடுபடுவது சட்டப்படியும் குற்றம். ஆதலால் தயவுசெய்து மீண்டும் இந்த குற்றத்தை நீங்கள் செய்யாதீர்கள்’ என்று வேண்டிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sylendra Babu