ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஊரடங்கு பொழுதுகளில் மக்களிடம் இப்படிதான் நடந்துகொள்ளவேண்டும்- காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு உத்தரவு

ஊரடங்கு பொழுதுகளில் மக்களிடம் இப்படிதான் நடந்துகொள்ளவேண்டும்- காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு உத்தரவு

சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

sylendra babu | கொரோனா பாதிப்பால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஊரடங்கு பொழுதுகளில் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு காவல்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காவல்துறையினருக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

சைலேந்திர பாபு வழங்கிய அறிவுரையில், ‘இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுமுடக்கம் ஆகியவை அமலில் இருக்கும்போது, மத்திய, மாநில அரசு, நீதித்துறை, உள்ளாட்சி, வங்கி, போக்குவரத்துத் துறை ஊழியர்களை அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்கவேண்டும்.

பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள், பத்திரிகை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அடையாள அட்டையைப் பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்கள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது.

வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு

 முழு முடக்கம் அமலில் இருக்கும் ஜனவரி 9-ஆம் தேதி உணவு விநியோகிக்கும், மின்வணிகப் பணியாளர்களை காலை 7 முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கலாம். அரசு நுழைவுத்தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்புக் கடிதத்தைக் காட்டினால் அனுமதிக்கவேண்டும்.

விமானம், ரயில் பேருந்து நிலையங்களுக்குச் செல்வோரையும் அங்கிருந்து வருவோரையும் அனுமதிக்க வேண்டும். விவசாயப் பணிக்காக செல்வோர், அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊர் செல்வோரை அனுமதிக்கலாம். வாகனச் சோதனையின் போது மக்களிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ளவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Lockdown, Sylendra Babu