தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். நியமனம்!

சைலேந்திர பாபு

1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற சைலேந்திரபாபு, தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கியவர். அதன் பின்னர்,  துணை ஆணையர், இணை ஆணையர், ஆணையர்,  வடக்கு மண்டல ஐஜி,  சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்

  • Share this:
    தமிழகத்தின் 30வது டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். 

    தமிழ்நாடு டிஜிபியாக உள்ள திரிபாதி நாளையுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அணுப்பியது. இந்நிலையில், பிஎஸ்சியிலிருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.

    1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற சைலேந்திரபாபு, தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கியவர். அதன் பின்னர்,  துணை ஆணையர், இணை ஆணையர், ஆணையர்,  வடக்கு மண்டல ஐஜி,  சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    சைலேந்திர பாபு, தற்போது ரயில்வே துறை டிஜிபியாக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published: